Categories
மாநில செய்திகள்

ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்களுக்கு… சிறப்பு ஏற்பாடு… வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி திருக்கோயில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அமர்வதற்காக இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோவிலில் 100 ரூபாய் கட்டண தரிசனம், மற்றும் கட்டணமில்லா தரிசனம் வரிசையில் செல்லும் பக்தர்கள் காத்திருக்கும்போது அமர்வதற்காக திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரிகளின்  குழு தலைவர் கருணாநிதி ரூபாய் 7 ,20,000 மதிப்புடைய 6 பெஞ்சுகளை வழங்கியுள்ளார்.

மேலும் கரூரை சேர்ந்த பக்தர் ரமேஷ்பாபு 3,60,000 மதிப்புடைய 30 பெஞ்சுகளையும்,  ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஆஞ்சநேயலு 2,40,000 மதிப்புடைய 20 பெஞ்சுகளை, கேலக்ஸி டிராவல்ஸ் ரவி 1,20,000 மதிப்புடைய பத்து விரல்களையும் வழங்கியுள்ளர். சுவேனந்தர் ரூ.12 ஆயிரம் மதிப்புடைய ஒரு பெஞ்சும் மற்றும் ஸ்ரீரங்கம் மங்களம் ஹோம் பில்டர்ஸ் முரளி 1 லட்சம் மதிப்புடைய 10 சில்வர் தண்ணீர் டிரம்களையும், கோயில் இணை ஆணையர் மாரிமுத்துவிடம் வழங்கினர். உடன் அர்ச்சகர் சுந்தர் பட்டர் , தலைமையாரியர் புலவர் கிருஷ்ணா , கண்காணிப்பாளர் (பொறுப்பு ) சுதர்சன் போன்றோர்  உடன் இருந்துள்ளனர்.

Categories

Tech |