Categories
மாநில செய்திகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்…. வைகுண்ட ஏகாதசி…. சொர்க்கவாசல் திறப்பு…

ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் வருடம் முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதில் மார்கழி மாதம் நடைபெறக்கூடிய திரு அத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா ஒரு தனித்துவம் மிக்கது. ஆனால் இந்த வருடம் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

3-ஆம் தேதி முதல் பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் 20 நாட்களும் பெரியபெருமாள் எனப்படும் மூலவர், ரங்கநாதர், முத்தங்கி சேவை சாதிப்பார். மேலும் பகல் பத்து உற்சவத்தின் போது தினமும் நம்பெருமாள் ஒவ்வொரு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளுகிறார். இதே போன்று ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். ரா பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும்.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு 4:45 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளுகிறார். இதையடுத்து நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மேலும் காலை 7 மணி வரை சேவார்த்திகள் அனுமதி இல்லை. காலை 7 மணி முதல் 8 மணி வரை பொதுமக்கள் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், சொர்க்கவாசல் 15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை பிற்பகல் 1 மணி முதல் இரவு 7:30 மணி வரையிலும் திறந்திருக்கும். 20-ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8:30 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும்.

21-ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. 22-ஆம் தேதி பகல் 1 மணிமுதல் இரவு 7:30 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். 23-ஆம் தேதி காலை 10:30 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும். கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 7 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தொடர்ந்து இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இரவு 8 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. மேலும் கார்த்திகை மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் நிகழ்வு. ரங்கா ரங்கா முழக்கத்துக்கு இடையே பரதபத வாசலை கடந்தார் நம்பெருமாள்.

Categories

Tech |