Categories
உலக செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்சுக்கு 21 விமானங்கள்… அரசு எடுத்த திடீர் முடிவு……!!!!!

உலகநாடுகளுக்கு வழங்கக்கூடிய 51 பில்லியன் டாலர் கடனை உடனே திருப்பித் தர முடியாது என்று அறிவித்த இலங்கை, நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன்ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு 21 விமானங்களை குத்தகை முறையில் வாங்க முடிவெடுத்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தட்டுப்பாடு ஏற்பட்டு விண்ணை முட்டும் அளவிற்கு விலை உயர்ந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அடுத்த 3 வருடங்களில் 24 முதல் 35 விமானங்களை வாங்கவும், பழைய விமானங்களை மாற்றவும் முடிவு செய்து அதற்குரிய 4 முன்மொழிவுகளை அரசு வெளியிட்டிருக்கிறது. இதற்கிடையில் அன்னிய செலவாணி கையிருப்பு பற்றாக்குறை காரணமாக நாளை முதல் 5 நாட்களுக்கு பங்குச்சந்தை வர்த்தகத்தை முடக்குவதாக கொழும்பு பங்குச்சந்தை அறிவித்திருக்கிறது.

Categories

Tech |