Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஸ்ரீ வில்லிபுத்தூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும் குறைகளும் ?

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு உள்ள ஆண்டாள் கோவில் மிகவும் பிரபலமானதாகும். இங்குள்ள 192 அடி உயர கோபுரமே தமிழக அரசின் சின்னமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தித்திக்கும் இனிப்பு சுவை கொண்ட பால்கோவாவும் ஸ்ரீவில்லிபுத்தூரில் தனி சிறப்பாகும். கடந்த ஆண்டு பால்கோவாவுக்கான புவிசார் குறியீடு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வழங்கப்பட்டது.

மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக பதவி வகித்த பி.எஸ். குமாரசாமி ராஜா வென்ற தொகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். திமுக, காங்கிரஸ் கட்சிகள் தலா 3 முறை வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 6 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளன. மறைந்த தாமைரைக்கனி சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற தொகுதி. இந்திய கம்யூனிஸ்ட் 2முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தொகுதியின் தற்போதய எம்எல்ஏ அதிமுகவின் சந்திரபிரபா ஸ்ரீவில்லிபுத்தூர் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் இரண்டரை லட்சம்.

ஆண்டாள் மார்கழி நீராட்டு உற்சவ குளத்தில் தடுப்பு சுவர் இடிந்ததால் நீர் வரத்து தடைபட்டுள்ளதாகவும், இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். சதுரகிரி மலை கோவிலுக்கு செல்லும் வழியில் ஆற்றை கடக்க இரும்பு பாலங்கள் அமைக்கப்படும் என்பது நீண்டகால எதிர்பார்ப்பு. சுற்றுலா பயணிகளுக்கு வாகன நிறுத்தம், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. தென்னை விவசாயம் நடைபெறும் இப்பகுதியில் தேங்காய் கொள்முதல் நிலையம் வேண்டும் என்பது விவசாயிகளின் விருப்பம்.

புலிகள் சரணாலயம் அமைக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையை உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் கூட்டுறவு நூற்பாலை திறக்கவேண்டும், புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க செண்பகவல்லி அணையை கட்ட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. எதிர்பார்ப்புகள் கோரிக்கைகள்யாவும் தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் வரும் தேர்தல் பிரச்சனைகள் தீர வழிவகுக்குமா என்று காத்திருக்கிறார்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி மக்கள்.

Categories

Tech |