ஸ்ரீ வில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மான்ராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,49,580 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 73.03% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிட்ட மான்ராஜ் தலா 70,475 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாதவ ராவ் தலா 57,737 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்ட எம். சந்தோஷ்குமார் தலா 23,682 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட பா அபிநயா தலா 20,348 வாக்குகள் பெற்றுள்ளார். இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மான்ராஜ் தலா 12,738 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை அதிமுகவினர் ஊரடங்கு விதிமுறைகளுடன் பாதுக்காப்பாக தனது குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளனர்.