ஸ்ரீஹரி நடராஜன் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்று உள்ளார்.
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ஸ்ரீ நடராஜன் தேசிய சாதனை படைத்துள்ளார். உஸ்பெகிஸ்தான் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ஸ்ரீ ஹரி நடராஜ் 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் 25.11 வினாடி கடந்து 2-வது தங்கப் பதக்கம் வென்றார். ஏற்கனவே 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அத்துடன் 54.07 வினாடிகளில் கடந்து முந்தைய தேசிய சாதனையை முறியடித்தார். உஸ்பெகிஸ்தான் ஓபன் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 18 தங்கம், 7 சில்வர், நான்கு வெண்கல பதக்கம் என 29 பதக்கங்கள் வென்றது.