Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஸ்லீப்பர் கோச் பஸ்சில் வைத்து பலாத்காரம்…. வழிமாறும் பெண் பிள்ளைகள்…. பெற்றோர்களே உஷார்…!!!!

சேலம் மாவட்டம் காட்டுக்கமகொட்டாய் என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு முகநூல் மூலமாக ஆத்தூர் வளையமாதேவி என்ற பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(24) என்பவரோடு காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக அவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி சிறுமி வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். இதனால் இவருடைய பெற்றோர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் தன்னுடைய மகளை தினேஷ்குமார் என்பவர் கடத்தி சென்றுவிட்டதாக கூறியிருந்தனர்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியையும் தினேஷ் குமாரையும் காவல்துறையினர் தேடி வந்தனர்.கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி சிறுமியை போலீசார் மீட்டு விசாரணை செய்தனர். இது குறித்த விசாரணையில் தினேஷ்குமார் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்துக் கொண்டு சென்னைக்கு சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் உதவியோடு திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்த போது சிறுமிக்கு 17 வயது தான் ஆகிறது என்று அவர்கள் திருமணம் செய்து வைக்க மறுத்து மீண்டும் ஊருக்கு செல்ல சொகுசு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர்.

ஸ்லீப்பர் கோச் பஸ்சில் இருவரும் ஒரே படுக்கையில் ஒன்றாக வந்தபோது உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே நீண்ட நேரம் பேருந்து அங்கேயே நின்றுள்ளது. அப்போது தினேஷ்குமார் சிறுமியை பஸ்ஸில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் வீட்டுக்கு கொண்டு வந்து விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தினேஷ்குமாரை தேடி வந்த நிலையில் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவரை சிறையில் அடைத்துள்ளனர். சிறுவயதிலேயே பெண் குழந்தைகள் பாதை மாறி சென்று பாதிக்கப்பட பல வழிகள் உண்டு என்பதை பெற்றோர்கள் நினைவில் வைத்துக் கொண்டு உஷாராக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |