தங்க கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் ஸ்வப்னா முன்ஜாமீன் மனு கேரள உயர்நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பரபரப்பை கிளப்பி வருவது தங்க கடத்தல் விவகாரம். இதற்கு ஸ்வப்னா என்ற பெண் மூளையாக இருந்து செயல்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் தலைமறைவாகி உள்ளார். அவரை கைது செய்ய பல்வேறு மட்டத்திலும் அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சம்பவதிற்கும், தனக்கு சம்பந்தம் இல்லை என ஸ்வப்னா தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் ஸ்வப்னா கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தலைமறைவாக உள்ள ஸ்வப்னாவுக்கு தங்க கடத்தலில் பங்கு உள்ளது என உயர் நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன் வைத்தார்கள். இதையடுத்து ஸ்வப்னா முன்ஜாமீன் மீதான விசாரணை 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஸ்வப்னாவுக்கு முன்ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.