Categories
மாநில செய்திகள்

ஸ்வாதி கொலை வழக்கில் திருப்பம்…. ராம்குமார் குடும்பத்துக்கு 10 லட்சம் இழப்பீடு…!!!

2016ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் மின்கம்பியை கடித்து இறந்ததாக கூறப்பட்டது. தற்போது இந்த விவகாரத்தில் சுதந்திரமாக விசாரணை நடத்துமாறு தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சிறையில் உயிரிழந்த ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. சிறையில் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான அதிகாரிகளை பணியமர்த்தவும் மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Categories

Tech |