Categories
தேசிய செய்திகள்

ஸ்விகி, சொமேட்டோக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி…. மத்திய அரசிடம் கேள்வி கேட்கும் நிறுவனம்…!!!

ஆன்லைன் உணவு சேவை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி குறித்து அந்நிறுவனங்கள் விளக்கம் கொடுத்துள்ளனர் .

ஆன்லைன் உணவு சேவை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி குறித்து சுவிகி, ஸ்மோட்டோ நிறுவனங்கள் ஒன்றிய அரசிடம் விளக்கம் கொடுத்துள்ளனர். செப்டம்பர் 17ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற 45ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆன்லைன் உணவு சேவை நிறுவனங்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை 5 சதவிகிதம் ஜிஎஸ்டி அதிகரிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது நுகர்வோருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது. இருப்பினும் ஜிஎஸ்டி வரம்புக்குள் வராத உணவகங்களுக்கு இது பொருந்துமா என்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் முன்னணி உணவு சேவை நிறுவனங்கள் இந்த வரி எவ்வாறு விதிக்கப்படும் என்று ஒன்றிய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளனர். இது அடுக்கு வரி விதிப்புக்கு வழிவகுக்குமா என்று சந்தேகம் எழுப்பியுள்ளது. இந்த நிறுவனங்கள் நுகர்வோரின் கைகளில் பொருள் சென்று சேரும்போது விலை அதிகரிக்க கூடும் என கவலை தெரிவித்துள்ளனர். நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளும்படி தெளிவான அறிக்கைகளை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |