ஸ்விட்ஸர்லாந்தில் கொரோனா தொற்று பரவலால் திட்டமிட்டபடி மார்ச் 22 ஆம் தேதி அடுத்தகட்ட கட்டுப்பாடுகளை நெகிழ்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
ஸ்விட்ஸர்லாந்தில் இந்த மாதம் அதிகமாக கொரோனா தொற்று பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் நேற்றைய நிலவரப்படி 24 மணி நேரத்தில் 1491 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது .இதற்கு காரணம் ஸ்விட்ஸர்லாந்தில் மார்ச் 1 முதல் சில கட்டுப்பாடுகளை நெகிழ்த்தியதால் தான் அதிகமாக பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
பிரிட்டனிலுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதுடன்,வேகமாக பரவி வருவதால் ஸ்விட்ஸர்லாந்தின் கொரோனா தொற்று அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.இதனிடையே மார்ச் 22ஆம் தேதி உணவகங்கள் திறப்பதற்கு திட்டமிட்டிருந்தது.ஆனால் தற்போது கொரோனா அதிகரித்துள்ளதால் மார்ச் 19-ஆம் தேதி வரை நாட்டில் கொரோனா பரவல் பாதிப்பை பொறுத்தே உணவகங்கள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.