Categories
உலக செய்திகள்

ஸ்விட்ஸர்லாந்தில் மனைவியை கொலை செய்ய முயற்சி செய்த கணவன் கைது ..!!

சுவிட்சர்லாந்தில் குடும்ப பிரச்சினையால்  மனைவியை கொடுமைப்படுத்திய 46 வயதான நபரை போலீசார் கைது செய்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஆர்காவ் மண்டலத்தில் குடும்ப வன்முறையால் மனைவியை துன்புறுத்தி அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .இந்த கொடூர சம்பவம் ஆர்காவ் மண்டலத்தின் schafisheim  பகுதியில் நடந்துள்ளது . சம்பவத்தை குறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததால் போலீசார் விரைந்து வந்து பார்க்கும்போது 44 வயதான பெண்ணொருவர் மூச்சின்றி கிடந்துள்ளார்.

உடனே அவரை மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக 46 வயதான அப்பெண்ணின் கணவரை கொலை முயற்சியின்  பேரில் போலீசார் கைது செய்தது.

Categories

Tech |