ஸ்விட்ஸர்லாண்ட் நதியில் சர்க்கரை ஆலை கழிவு கலந்ததால் மீன்கள் செத்து மிதப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெனிவா தீயணைப்பு வீரர்கள் மின் மோட்டர் மூலம் நதியில் தண்ணீரை பம்ப் செய்து வருகின்றனர். அப்போது தவறுதலாக டார்டாகினி என்ற இடத்தில் உள்ள தண்ணீரில் சர்க்கரை ஆலை கழிவுகள் கலந்து விட்டது .அதனால் தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது. இதனால் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றாலும் மீன்கள் செத்து மிதக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது .
இந்நிலையில் நதிக்குள் ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் புதிதாக தண்ணீரை நதிக்குள் கொட்டி வருகின்றனர்.இந்த நடவடிக்கையால் மீன்கள் போன்ற மற்ற உயிரினங்ள் காப்பற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது .