Categories
மாநில செய்திகள்

ஹச்டிஎஃப்சி வங்கிக்கு… ரிசர்வ் வங்கி தடை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

குறிப்பிட்ட டிஜிட்டல் வங்கி நடவடிக்கைகள் மற்றும் புதிய கிரெடிட் கார்டு வழங்குதல் ஆகியவற்றை நிறுத்த ரிசர்வ் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கி சேவை நவம்பர் 21 முதல் 22 வரை சுமார் 12 நேரம் முழுமையாக முடங்கியது. இதனால் இந்த வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவி இருந்தது. இதை தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஹெச்டிஎஃப்சி வங்கி சேவை தடைபட்டதற்கான காரணம் கேட்ட நிலையில், தற்போது ஹெச்டிஎப்சி வங்கி புதிய கிரெடிட் கார்டுகளை கொடுக்க தற்காலிக தடைவிதித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் டிஜிட்டல் திட்டத்தின் மூலம் புதிய டிஜிட்டல் திட்டங்களை அறிமுகம் செய்வதையும், ஐடி சேவை மூலம் வர்த்தக மற்றும் இதர முயற்சிகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளது. புதிய டிஜிட்டல் வங்கி நடவடிக்கைகள், புதிய கருவிகள் வழங்குதல் ஆகியவற்றை நிறுத்தி வைக்குமாறு ரிசர்வ் வங்கி ஹெச்டிஎப்சி வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.

வங்கியில் ஏற்பட்ட பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு, ரிசர்வ் வங்கியின் சம்மதம் பெற்று தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள வங்கிகள் மீண்டும் தொடங்கப்படும் என்று ஹெச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது. வங்கியின் உத்தரவால் புழக்கத்திலுள்ள கிரெடிட் கார்டு மற்றும் இதர டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அந்த வங்கி விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |