Categories
தேசிய செய்திகள்

ஹஜ் பயணம்…. இவர்களுக்கு மட்டும் அனுமதி….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!

மும்பையில் ஹஜ் பணிகளுடன் பயிற்சியாளராக செல்பவர்களுக்கான 2 நாள் தேசிய பயிற்சி முகாமை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், ஹஜ் புனித யாத்திரையில் பங்கேற்பாளர்களின் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக ஹஜ் பயணத்தின் முழு விவகாரங்களும் இணையம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பித்துள்ளனர் மேலும் இந்தியா மற்றும் சவுதி அரசுகள் எடுக்கும் முடிவுக்கு உட்பட்டு 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |