Categories
மாநில செய்திகள்

ஹஜ் யாத்திரை…. பிரதமரிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

ஹஜ் புனித யாத்திரைக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் செய்யும் நடைமுறையை தொடர வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் முக. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஹஜ் யாத்திரையை பற்றி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து 4500 க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் சென்னையிலிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் இருந்தும் யாத்திரிகர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணம் செய்தனர்.

மேலும் தமிழகத்தைச் சேர்ந்த யாத்திரீகர்கள் கொச்சி விமான நிலையத்தில் இருந்து ஏறுவது அவர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கிறது. இது பற்றி தனக்கு ஏராளமான கோரிக்கைகள் இஸ்லாமிய சமூகத்தினர், பொதுமக்கள், அரசியல் குழுக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக கோரிக்கைகள் பெறப்பட்டது.

எனவே சென்னையில் இருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொச்சி நகரை புறப்படும் இடமாக அறிவிக்கப்பட்டதை மாற்றி அமைத்து, யாத்ரீகர்களுக்கு உதவும் வகையில் இந்த முடிவை மறுபரிசீலனை செய்து இந்தியாவின் 4-வது பெரிய நகரமாக விளங்கும் சென்னை விமான நிலையத்திலிருந்து வழக்கம்போல் புறப்படும் வகையில் அனுமதி வழங்க வேண்டும். மேலும் இதுபற்றி தொடர்புடைய துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |