உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராசில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம்பெண்னின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற சமாஜ்வாதி மற்றும் ராஷ்டீரியல் லோக்தல் கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் நிலவியது.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம் பெண்ணை 4 இளைஞர்கள் கடத்திச் சென்று கடுமையாக தாக்கி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர். இதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சமாஜ்வாதி மற்றும் ராஷ்ட்ரிய லோக் தல் கட்சியினர் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்றனர்.
அப்போது அவர்களை போலீசார் தடுக்க முயன்றதுடன் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹத்ராசில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தினரை திரு. ராகுல்காந்தி, திருமதி. பிரியங்கா காந்தி சந்திக்கச் சென்ற போது போலீசாரால் கீழே தள்ளி விடப்பட்டு தாக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து ஹத்ராசில் செல்பவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி வரும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.