நாட்டையே உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை 4 பேர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.
பலத்த காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக விசாரணை மேற்கொண்டு வந்த சிபிஐ அதிகாரிகள், ஹத்ராஸ் நீதிமன்றத்தில் நேற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். குற்றம்சாட்டப்பட்ட நால்வர் மீதும் பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.