Categories
மாநில செய்திகள்

ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கேட்டு வலுக்கும் போராட்டம் ….!!

ஹத்ராஸ் பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டும் அவரது குடும்பத்தை பார்க்க சென்ற ராகுல்காந்தி. பிரியங்கா காந்தி தாக்கப்பட்டதைக் கண்டித்தும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இன்றும் போராட்டம் நடந்து வருகின்றது.

கரூர் அமராவதி ஆற்றுப் பாலம் அருகே உள்ள காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கட்சி தொண்டர்களுடன் சத்யாகிரக போராட்டம் நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாரதிய ஜனதா ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டினார். ஈரோடு மூல பாளையத்தில் நடந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர். ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். தஞ்சை ரயில் நிலையத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

பெண்கள் போல வேடமிட்டு வந்திருந்த ஆண்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை சித்தரிக்கும் விதமாக இரும்பு ஆடை அணிந்து வந்தனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்திய பகுஜன் சமாஜ் கட்சியினர் ஹத்ராஸ் பெண்ணின் மரணத்திற்கு பொறுப்பேற்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். போராட்டத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Categories

Tech |