Categories
சினிமா

ஹனிமூன் சென்ற இடத்தில் அசந்து தூங்கிய பிரபல நடிகர்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் (53) நடிகர் பென்அப்லெக் (49) என்பவரை 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் பிரிந்து விட்டனர். அதன் பிறகு நடிகர்,நடன கலைஞர் மற்றும் பாடகர் என மூன்று பேரை நடிகை ஜெனிபர் லோபஸ் திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். இந்நிலையில் தற்போது நான்காவதாக நடிகர் பென் அப்லெக்கை மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த பின்னர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஜெயனி ஆற்றில் சுற்றுலா கப்பல் ஒன்றில் தேன்நிலவு கொண்டாட இருவரும் ஒன்றாகச் சென்றுள்ளனர். அப்போது சென்ற இடத்தில் நடிகர் பென்கப்பலிலேயே ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி அடித்துப் போட்டது போன்று அசந்து தூங்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன.

Categories

Tech |