தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த மாதம் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமுனுக்காக சென்றனர். ஒரு வாரம் தாய்லாந்தில் கழித்து விக்னேஷ் சிவன் நயன்தாரா கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினர். அதனை தொடர்ந்து நேராக மும்பை சென்ற நயன்தாரா சித்ரகூட் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு முடிந்து நயன்தாரா வெளியே வந்த போட்டோக்கள் வெளியானது.
இந்நிலையில் ‘ஜவான்’ படமாக்கப்படும் காட்சிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சித்ரகூட் ஸ்டூடியோவில் 2 செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஷாருக்கான் மற்றும் அவருடைய குடும்ப சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. இந்த குடும்பக் காட்சியில் தான் தற்போது ஷாருக்கானுடன் நயன்தாரா நடித்து வருகிறார். இதில் முகம் முழுக்க முழுக்க பேண்டேஜ் சுற்றியபடி இருந்த ஷாருக்கானின் லுக் வைரலானது. இதற்கிடையில் ஜாவான் படத்தில் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்தில் நடித்து வருகிறார்.