நடிகை ஹன்சிகா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2011-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா. இதை தொடர்ந்து இவர் விஜய், சூர்யா, ஜெயம் ரவி போன்ற பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது ஜமீல் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் ஹன்சிகா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘ரவுடி பேபி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜ சரவணன் இயக்க இருக்கிறார்.
இன்று
புதுப்படத்தின்
படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தேன்.உடன்
நாயகி ஹன்சிகா மோத்வானிதயாரிப்பு – ரமேஷ் பிள்ளை
இயக்கம் – ராஜ சரவணன்
ஒளிப்பதிவு – பி.செல்லத்துரை
சாம்.சி.எஸ் இசையில்
பாடல்கள் எழுதுகிறேன் pic.twitter.com/c91shgnsZ9— வைரமுத்து (@Vairamuthu) October 6, 2021
மேலும் இந்த படத்தில் சத்யராஜ், மீனா, ராய்லட்சுமி, ஜான் கொக்கன், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இன்று இந்த படத்தின் படப்பிடிப்பை கவிஞர் வைரமுத்து தொடங்கிவைத்தார். விரைவில் ரவுடி பேபி படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.