Categories
சினிமா

ஹன்சிகாவின் “மஹா”… நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியான ரிலீஸ் தேதி…!!!!

ஹன்சிகாவின் மஹா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

இயக்குனர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்த மஹா திரைப் படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கின்றார். இந்த படத்தின் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு வெளியீட்டிற்காக தயாராகியுள்ள நிலையில் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் தான் நீண்டகாலமாக இழுத்தடித்து வருகின்றது எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி கூறியிருப்பதாவது, “படம் வெளியில் வராமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் அதற்கு இவ்வளவு நேரம் எடுத்தது ஏமாற்றம் என்று நான் கூறுவேன். ஆனால் இது எனது ஐம்பதாவது படம் என்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் இந்த படமானது வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |