நடிகை ஹன்சிகா ஒருவர் மட்டுமே நடித்த திரைப்படம் ’105’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இந்த படத்தில் மிக குறைந்த வசனங்கள் மட்டுமே இருப்பதாலும், இந்த படத்தின் கதை அனைத்து மொழி ரசிகர்களுக்கும் ஏற்றதாக இருப்பதாலும் இந்த படத்தை தமிழ் உள்பட இந்தியாவில் உள்ள பல பிராந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த படம் திகில் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்டது என்பதால் சீனா, கொரியா ஆகிய நாடுகளிலும் இந்த படத்தை வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.