நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு மஹா படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் ஹன்சிகாவின் 50-வது திரைப்படம் மஹா . யூ.ஆர்.ஜமீல் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் ஸ்ரீகாந்த், மானஸ்வி, சனம் செட்டி, கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் மஹா படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு மஹா படத்தின் புதிய டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .