உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரிலுள்ள மாவட்ட சிறைச்சாலையில் பெரும்பாலான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் ஒருசில கைதிகளுக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது 43 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட சிறை அதிகாரி கூறியதாவது “கொரோனா தொற்று பரிசோதனைக்காக சிறையில் 425 கைதிகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டது. இதில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்” என அவர் கூறினார்.