ஹரி நாடார் தன்னிடம் இருக்கும் தங்கம் மற்றும் சொத்து மதிப்பு பற்றி வேட்ப்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஆலங்குளம் தொகுதியில் தனித்து போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான ஹரிநாடார் 15 ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த வேட்பு மனுவில் தன்னிடம் ரூபாய் 12,61,19,403 மதிப்பில் அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ. 14,65,000 மதிப்பில் அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 4.73 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ தங்கம் தான் வைத்திருப்பதாகவும் ஹரிநாடர் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.