ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட் என்ற மாவட்டத்தில் ரசாயன ஆலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த மாவட்டத்தில் உள்ள ரசாயன ஆலையில் திடீரென்று தீ பிடித்த நிலையில் அது மளமளவென ஆளை முழுவதும் பரவியது. அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறியது மட்டுமல்லாமல் தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகை அந்த பகுதி முழுவதும் சூழ்ந்தது. இதையடுத்து அரசு வேண்டுகோளின் பேரில் மீட்பு பணிக்காக டெல்லியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விடுமுறை நாளில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
Categories