நடிகர் கருடா ராம் ‘AV33’ படத்தின் படப்பிடிப்பை இன்று நிறைவு செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஹரி தற்போது அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், ‘கே.ஜி.எப்’ பிரபலம் கருடா ராம், யோகி பாபு, அம்மு அபிராமி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘AV33’ படத்தில் வில்லனாக நடிக்கும் கருடா ராமின் காட்சிகள் இன்றுடன் முடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை வழியனுப்பும் பொருட்டு படக்குழு அவருக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்துள்ளார்கள். இதுகுறித்து பேசிய கருடா ராம் ‘கே.ஜி.எப் படத்திற்கு பின் நிறைய படங்களில் நடித்து விட்டேன். ஆனால் இது போல எந்த ஒரு படக்குழுவும் என்னை கொண்டாடியதில்லை. இந்த படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இயக்குனர் ஹரி மற்றும் படக்குழுவினரை என் வாழ்நாள் முழுவதும் நான் மறக்க மாட்டேன்’ என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.