Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளில் வெளியான ‘ஓமணப் பெண்ணே’ பாடல் அப்டேட்… ரசிகர்கள் செம குஷி…!!!

நேற்று ஹரீஸ் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு ஓ மணப்பெண்ணே படத்தின் பாடல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு விஜய் தேவர்கொண்டா, ரீத்து வர்மா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பெல்லி சோப்புலு. தற்போது இந்த படம் தமிழில் ஓமணப் பெண்ணே என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும்  நடித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு ஓ மணப்பெண்ணே படத்தின் 2-வது பாடல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அனிருத் பாடிய ‘போதை கணமே’ என்கிற பாடல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |