Categories
கிசு கிசு சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி

“ஹரிஷ் கல்யாண்-ரைசா மீதான கிசுகிசுப்பு”… பேட்டியில் அதிரடி முற்றுப்புள்ளி…!!!

கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ரைசா வில்சன்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ரைசா வில்சன். பிக்பாஸில் இருந்து வெளியேறிய உடன் வேலையில்லா பட்டதாரி திரைபடத்தில் நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து ரைசா வில்சன் பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் ஹீரோ ஹீரோயினாக நடித்தார். இத்திரைப்படத்தில் நடைமுறையிலுள்ள காதலையும் லிவிங் டுகதர் முறையையும் அழகாக தங்களின் நடிப்பில் வெளிபடுத்தி இருப்பார்கள்.

இத்திரைப்படமானது ரைசா வில்சனுக்கு முதல் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தில் ரைசா வில்சன் ஹரிஷ் கல்யாண் இருவருக்கும் ரோமன்ஸ் நன்றாக ஒர்க்அவுட் ஆனதால் இருவரும் காதலிக்கிறீர்களா என கிசுகிசுத்த ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் ரைசா வில்சன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பொழுது ஹரிஷ் கல்யாண் உடன் பிக்பாஸில் இருந்த பொழுது இருவரும் காதலித்தீர்களா என கேட்டபோது அவர் எனக்கு நல்ல நண்பர், க்யூட்டான நண்பர், நான் அவரை ஒருபோதும் காதலிக்கவில்லை என கூறியுள்ளார். இதன் மூலம் கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Categories

Tech |