ஹரி- அருண் விஜய் இணையும் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது சினம், அக்னி சிறகுகள், பார்டர் போன்ற பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் அருண் விஜய்யின் 33-வது படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், ராதிகா, யோகி பாபு, அம்மு அபிராமி, கே.ஜி.எப் பிரபலம் ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரம்ஸ்டிக் புரொடக்சன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் .
📽🎬 #AV33!!#DirectorHARI @priya_Bshankar @gvprakash @editoranthony @gopinathdop @DrumsticksProd @iYogiBabu @prakashraaj @realradikaa @Ammu_Abhirami
— ArunVijay (@arunvijayno1) July 28, 2021
கடந்த மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதையடுத்து இயக்குனர் ஹரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் AV33 படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என நடிகர் அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .