ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அருண் விஜய். தற்போது இவர் பாக்ஸர், சினம், பார்டர், அக்னி சிறகுகள் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதிகா, யோகி பாபு, பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி, ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Working on a rural script after ages with the magic-makers! #DirectorHari sir tops it off! Electrifying schedules ahead!
Few clicks from work for you all 😘 #AV33 @DrumsticksProd @0014arun #AnalArasu @johnsoncinepro @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/Mln128Az3T— ArunVijay (@arunvijayno1) August 9, 2021
டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இராமேஸ்வரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் அருண் விஜய் AV33 படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.