ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது பார்டர், அக்னி சிறகுகள், பாக்ஸர், சினம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர இவரின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, சமுத்திரகனி, அம்மு அபிராமி, கே.ஜி.எப் கருடா ராம், குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Proudly presenting the first look of @arunvijayno1 & #DirectorHARI
Titled as #Yaanai in Tamil & #Enugu in Telugu
Best wishes to entire team 💐
@priyabhavanishankar @iYogibabu @gvprakash @thondankani @radikaasarathkumar @0014arun @nivetha_joseph @johnsoncinepro @ctcmediaboy pic.twitter.com/xPLf35FTnI
— Drumsticks Productions (@DrumsticksProd) September 9, 2021
டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ‘யானை’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மிரட்டலான லுக்கில் அருண் விஜய் இருக்கும் இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.