ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் கங்கை அமரன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய்யின் 33-வது படத்தை ஹரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி, குக் வித் கோமாளி புகழ், கருடா ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் கங்கை அமரன் பல படங்களில் வசனகர்த்தாவாக பணிபுரிந்துள்ளார். மேலும் கரகாட்டக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய கங்கை அமரன் சில படங்களில் நடித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாக நடிக்காமல் இருந்த இவர் தற்போது ஹரி- அருண் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் ‘AV33’ படத்தில் நடித்து வருகிறார்.