பிரித்தானிய ராஜ குடும்ப பொறுப்பில் இருந்து வெளியேறும் முடிவை ஹரியும் அவரது மனைவி மேகனும் எடுத்து மகாராணியின் மனதை மிகவும் காயப்படுத்தி சோர்வடைய வைத்தது என அரச குடும்ப பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது. பதிவேட்டு புத்தகத்தில் இது தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. The new royals – Queen Elizabeth’s legacy and the future of the crownன் நூலாசிரியர் Katie nicholl பேசும்போது மறைந்த ராணியாருக்கு நெருக்கமானவர்கள் சொன்ன ஆதார தகவலின் படி ஹரி மேகன் குடும்பத்தை விட்டு வெளியேற முடிவை பற்றி சிந்திக்க கூட ராணியார் விருப்பப்படவில்லை.
ராணி மிகவும் உள்பட்டு எனக்கு தெரியாது எனக்கு கவலை இல்லை என வேதனையுடன் ஒரு சமயம் அது பற்றி கூறியிருக்கிறார். மேலும் ஹரியின் முடிவால் தான் விரும்பிய நேரத்தில் அவரின் பிள்ளைகளும் தன்னுடைய கொள்ளு பேரன் பேத்தியுமான Archie and lilibet போன்றோரை பார்க்க முடியவில்லை என்ற வருத்தமும் ராணிக்கு இருந்தது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஹரி மற்றும் மோகன் ராஜ குடும்ப பொறுப்பில் இருந்து விலகிய பின் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் சாந்தா பார்ப்பாவில் $14 மில்லியன் மதிப்புள்ள வீட்டில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.