பிரிட்டன் ராஜகுடும்பத்தினர் ஹரி-மேகன் தம்பதிக்கு போட்டியாக களமிறங்க தயாராகியுள்ளனர்.
பிரிட்டன் இளவரசர் ஹாரி மேகனை திருமணம் செய்த நாளிலிருந்து ராஜ குடும்ப மரபுகளின் விதிகளை மீறி இருவரும் மீறிவருகிறார்கள். அதாவது மேகன் நடிகையாக இருப்பதால் ராஜ குடும்பத்தின் வாழ்க்கையோடு இணைந்துகொள்ள ஆரம்பத்தில் சற்றே திணறியிருக்கிறார். மேலும் ஹரி-மேகன் தம்பதியருக்கு உதவியாக பணியாற்றிய பலரும் மேகனின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் வேலையை ராஜினாமா செய்தனர். ஆனால் ஹரியோ மேகன் எது கேட்டாலும் அதனை அவருக்கு வழங்க வேண்டும் என்று கூறியதால், மகாராணியார் அரச குடும்பத்தின் வழிமுறைகளை ஹரிக்கு நினைவுகூர வேண்டியதாயிற்று.
அதன்பின்பு ராஜ குடும்பத்தின் மரபுகளை பழகி விடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் மேகனோ தன் பழக்க வழக்கங்களுக்கு ஹரியை மாற்றியதோடு திடீரென்று மகாராணியாரிடம் கூட அறிவிக்காமல் ராஜ குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். அதன்பின்பு கனடாவில் குடியேறிய அவர்கள் அங்கு ஒத்து வராததால் அமெரிக்காவில் குடியேறி அங்கு அரசியல் குறித்து விமர்சனம் செய்ததால் அப்போதைய அதிபராக இருந்த ட்ரம்ப் அவமரியாதையாக மேகனிடம் பதில் அளித்துள்ளார்.
இவ்வாறு அரண்மனைக்குள் மேகன் காலடி எடுத்து வைத்ததிலிருந்து ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தற்போது வரை முடியவில்லை. இதனிடையே அமெரிக்காவின் ஒரு தொலைக்காட்சியில் ஒபாரா வின்பிரேயின் என்ற நிகழ்ச்சியில் ஹரி-மேகன் ஒரு பேட்டியளிக்க முடிவெடுத்தார்கள். இந்நிகழ்ச்சியில் ஒபாரா எப்படி வேண்டுமானாலும் கேள்விகளை கேட்பார். அதற்கு இவர்கள் அளிக்கும் பதில் எவ்வாறு இருக்குமோ? என்ற அழுத்தம் அரண்மனையில் உருவானது.
எனவே உலகம் முழுவதும் ஹரி-மேகன் அளித்துள்ள பேட்டியை காண எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில் பிரிட்டன் மகாராணியார் அதே தொலைக்காட்சியில் இவர்களின் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கும் நேரத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு ராஜ குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் நாட்டு மக்கள் முன்பு தொலைக்காட்சியில் உரையாற்ற இருப்பதாக அறிவித்துள்ளார்.
அதாவது ஹரி-மேகன் தொலைக்காட்சி பேட்டி மார்ச் ஏழாம் தேதி அன்று ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் அதே நாளில் மகாராணியாரின் நிகழ்ச்சியும் ஒளிபரப்பாவதால் ராஜ குடும்பத்தின் மீது அதிகப் பற்று வைத்த பிரிட்டன் மக்கள் பலரும் ஹரி-மேகன் மீது கோபத்தில் இருப்பதால் மகாராணியாரின் நிகழ்ச்சியை விட்டுவிட்டு ஹரி நிகழ்ச்சியை பார்க்கமாட்டார்கள். அவ்வாறு அவர்கள் பார்த்தாலும் கூட அவர்கள் மனம் முழுவதும் மகாராணியாரின் உரைதான் நிறைந்திருக்கும்.
மேலும் ஹரி-மேகன் பேட்டி பதிவான உடனேயே அவர்களின் ராஜ குடும்ப பட்டங்கள் பறிக்கப்பட்டன. இதனால் ராஜ குடும்ப பொறுப்புகள் தங்களிடம் இருக்கும் என்று எண்ணி இருவரும் பேட்டியளித்திருந்ததால் தற்போது கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதாவது தற்போது அவர்களின் பட்டங்களை தவிர்த்தால் ராஜ குடும்பத்திற்கும் அவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதனால் ராஜ குடும்பத்தின் ஆதரவை இழந்த தம்பதி அமெரிக்க தொலைக்காட்சியின் மூலம் புகழ் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அதையும் இழக்கப் போகிறார்களா? என்பது மார்ச் 7ஆம் தேதி தெரிந்துவிடும்.