Categories
உலக செய்திகள்

ஹரி-மேகன் பேட்டியில் பல விஷயங்கள் உண்மையில்லை என்று உறுதியாக்கப்பட்டது..!!ஓப்ரா வின்பிரேக்கு இதுகுறித்து சவால் .!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் அளித்த பேட்டியில் பல விஷயங்கள் உண்மை இல்லை என்று உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது.

பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினர் ஓப்ராவுடனான பேட்டியில் பல விஷயங்கள் உண்மை இல்லாததால் இது குறித்து ஓப்ராவும் ,சிபிஎஸ் தொலைக்காட்சி நிறுவனமும் விசாரணை மேற்கொள்வார்களா?என்பது பற்றி கேள்வி எழும்பியுள்ளது. அந்தப் பேட்டியில் ஹரியின் மனைவி மேகன் ராஜ குடும்பத்தை பற்றி இனவெறி, பாலின பாகுபாடு போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது சுமத்தினார். அந்த பேட்டி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ‘ராஜ குடும்பத்தினர்கள் இனவெறியர்கள் தானா ?’என்ற கேள்வி மக்கள் மனதிலும் எழுந்துள்ளது .

மேலும் அவர்கள் அதனால் இளவரசர் வில்லியமிடமே நேரடியாக  கேட்டனர் .மேலும் இந்த பேட்டியின் நடுவராக இருந்த ஓப்ராவே ஒரு கருப்பினப் பெண் அவர் பிரபலமாவதற்கு முன்பு நிறைய சோதனைகளை கடந்து வந்துள்ளார். அவர் சிறுவயதில் தனது பாட்டி வீட்டில் வளர்ந்ததாகவும் ஒன்பது வயதாக இருக்கும்போது உறவினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும்  1986 ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவரை கூறியுள்ளார். அவர் சிறு வயதில் பல கஷ்டங்களை அனுபவித்த பிறகுதான் ஒரு தொலைக்காட்சியின்  பிரபலமானார் .

ஆகவே மேகன் இவ்வாறு ராஜ குடும்பத்தை பற்றி குற்றச்சாட்டுகள் வைக்கும்போது ஓப்ரா அவர்  இடத்தில் தன்னை வைத்து பாத்திருக்கலாம் .இந்த விஷயங்கள் உண்மையா என்று அறியாமல் அந்தப் பேட்டியை வெளியிட்டதால்  பலரும் அதனை பார்த்துள்ளனர். இப்போது அது பொய் என்று தெரிய வந்ததால் அது பற்றிய உண்மைகளை ஓப்ராவும் ,சிபிஎஸ் தொலைக்காட்சி நிறுவனமும் விசாரிப்பார்களா ?என்று கேள்வி எழும்பியுள்ளது.

Categories

Tech |