ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் குத்தியாலத்தூர் பகுதியில் ஜடேபந்தப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவர் ஹலோ ஆப் மூலம் ஈரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி அவரது செல்போன் எண்ணை வாங்கி கொண்டார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கார்த்திக் சிறுமியின் ஆபாச பட புகைப்படங்களை பெற்று கொண்டார். ஒரு கட்டத்தில் சிறுமி கார்த்திக்கிடம் பேசுவதை தவிர்த்துள்ளார்.
இதனால் கார்த்திக் என்னிடம் பேசவில்லை என்றால் உனது ஆபாச போட்டோ மற்றும் வீடியோக்களை வலைதளத்தில் வெளியிடுவேன் என சிறுமியை மிரட்டியுள்ளார். அவருக்கு பாலியல் தொந்தரவும் அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஈரோடு மகளா நீதிமன்றம் கார்த்திக்கிற்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 வருடங்கள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.