தமிழகத்தில் உங்கள் வேடம் கலைந்து விட்டது இனியும் அரசியல் நாடகம் வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமியை ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து மக்களுக்கு செய்து வருகிறது.
இதற்கு மத்தியில் திமுக தலைவர் ஸ்டாலின் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் #Release7tamilsதீர்மானத்தை ஜனவரி 25 ஆளுநர் நிராகரித்த பிறகு 29 ஆம் தேதி ஒப்புதல் அளியுங்கள் என்று முதல்வர் ஈபிஎஸ் கடிதம் கொடுத்தாராம்.
ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என நேற்று சட்டமன்றத்தில் பொய் தகவல் அளித்தது ஏன்? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் உங்கள் வேடம் கலைந்து விட்டது. இனியும் அரசியல் நாடகம் வேண்டாம் என்று விமர்சனம் செய்துள்ளார்.