Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஹலோ சீனியர்” காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்ட மூதாட்டி…. போலீசாரின் உடனடி நடவடிக்கை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி 18-ஆவது வட்டத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தனது கணவரின் ஓய்வூதிய பணம் 1 லட்ச ரூபாய், 2 பவுன் தங்க நகை, வீட்டு மனை பத்திரம் ஆகியவற்றை தனது மூத்த மகன் வாங்கி வைத்துக்கொண்டு தர மறுப்பதாக புகார் அளித்துள்ளார்.

இது பற்றி அறிந்த நெய்வேலி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது, மூதாட்டியின் மகன் பணம், நகை, வீட்டு பத்திரத்தை வைத்துக்கொண்டு தர மறுத்தது தெரியவந்தது. அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் பணம், நகை, வீட்டு பத்திரத்தை கைப்பற்றி மூதாட்டியிடம் ஒப்படைத்தனர். பின்னர் மூதாட்டி போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |