கடலூர் மாவட்டத்தில் உள்ள கூத்தப்பாக்கம் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். அதில் தனது மகன் சுரேஷ் தன்னையும், தனது மனைவியையும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்திய போது சுரேஷ் தனது பெற்றோர்களை அடித்து துன்புறுத்தியது உறுதியானது. இதனையடுத்து பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சுரேஷை எச்சரித்து, எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என எழுதி வாங்கி கொண்டனர்.