சமூக வலைதளங்களில் பலவித வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோக்கள் மகிழ்ச்சி, சோகம், அச்சம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும் வீடியோவாக இருக்கும். இவற்றை நெட்டிசன்கள் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி சமீபகாலமாக வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதும், மக்களை தாக்குவதும் மற்றும் குடியிருப்புகளை செய்தபடுத்துவதும் போன்ன்ற செய்திகள் வெளி வருகின்றன. இது பற்றிய வீடியோகளும் வெளிவந்து அச்சமூட்டி உள்ளது. இருப்பினும் வனப்பரப்பு குறைந்து கொண்டே செல்வது மக்கள் ஆக்கிரமிப்பு வன அழிப்பு காரணங்களாக கூறப்படுகின்றன. இந்நிலையில் மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்த மருத்துவமனைக்கு சிறப்பு விருந்தினர்களாக சில யானைகள் சென்று பார்வையிட்டு உள்ளது.
முதலில் ஒரு யானை குனிந்த படி வார்டு ஒன்றுக்குள் நுழைகிறது. அதன் பிறகு பின்னாலே வரும் மற்றொரு யானைகளும் வாரத்துக்குள் செல்கிறது. இதனால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டதில் ஒரு சிலர் யானைகளை பின் தொடர்ந்து சென்று அதனை தங்களது மொபைல் போனில் புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் படம் பிடித்தனர். இந்த வீடியோஸ் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்கு 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் லைக்குகளை அளித்துள்ளனர். 300 பேர் வரை விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒருவர் கணேஷ் நோயாளிகளுக்கு ஆசிகள் வழங்க வந்துள்ளார் என்றும், மற்றொருவர் ஊசி போட வந்துள்ளார் என்றும் இன்னொருவர் காட்டுப்பகுதி அளிக்கப்படுவதன் எதிரொலியாக யானைகள் இது போன்று ஊருக்குள் வருகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.