Categories
தேசிய செய்திகள்

“ஹலோ நான் ஒன்னும் சார் இல்ல மேடம்…!!” வைரலாகும் நீதிபதியின் பேச்சு…!!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வழக்கு ஒன்றை ரேகா பள்ளி என்ற பெண் நீதிபதி விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது பேசிய எதிர்க்கட்சி வக்கீல் நீதிபதியை பார்த்து சார் சார் என்று கூறி பேசினார். அதைக் கேட்ட நீதிபதி வக்கீலிடம் நான் சார் இல்லை எனக் கூறினார். தொடர்ந்து அந்த வழக்கறிஞர் சாரி மேடம் நான் நீதிபதி இருக்கையில் இருப்பதால் சார் எனக் கூறி விட்டேன் எனக் கூறினார். வழக்கறிஞரின் இந்த பதிலை கேட்டு டென்ஷனான நீதிபதி ஏன் நீதிபதி இருக்கையில் ஆண் நீதிபதி மட்டும் தான் இருக்க வேண்டுமா.? பெண் நீதிபதி இருக்கக் கூடாதா.? எனக் கேட்டார். நீதிபதியின் இந்த கருத்து வைரலாகியுள்ளது. ஏற்கனவே நீதித்துறையில் பெண் நீதிபதிகள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்ற ஒரு கருத்து பரவலாக நிலவி வருகிறது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு பெண் நீதிபதிகள் சங்கம் ஒன்று அதிக அளவிலான பெண் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என மனு ஒன்றை அளித்திருந்தது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது, குவஹாத்தி, ஹிமாச்சல் பிரதேசம்,ராஜஸ்தான், சிக்கிம், ஜம்மு காஷ்மீர், லடாக், ஜார்க்கண்ட், ஒரிசா, உயர்நீதிமன்றங்களில் ஒரே ஒரு பெண் நீதிபதிதான் இருக்கிறார். மணிப்பூர், மேகலாயா, பாட்னா, திரிபுரா, உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றங்களில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை எனக் கூறப்பட்டிருந்தது.

Categories

Tech |