Categories
மாநில செய்திகள்

ஹவுரா டூ கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில்…. அரைகுறை ஆடையுடன் அட்டுழியம் செய்த வடமாநிலத்தவர்கள்…. பரபரப்பு….!!!!

ஹவுராவிலிருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் செங்கல்பட்டு மார்க்கமாக இயக்கப்படுகிறது. இதில் நேற்று அதிகளவிலான வடமாநிலத்தவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்த பயணிகள் இருக்கைகளில் சுமார் 200-க்கும் மேலான வடமாநிலத்தவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவ்வாறு முன்பதிவு செய்தவர்கள் இருக்கைகளில் அமர்ந்துகொண்ட வடமாநிலத்தவர்கள், முன்பதிவு செய்த பயணிகளுக்கு இடமளிக்காமல் உட்கார்ந்து இருக்கின்றனர். இதன் காரணமாக எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை அவர்களோடு வாக்குவாதம் செய்தவாறு நின்றபடியே பயணித்து வந்துள்ளனர்.

இதனால் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கிய முன்பதிவு செய்த பயணிகள் ரயில்வே காவல் நிலையத்தில் தகவலளித்து நீண்டநேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் வடமாநிலத்தவர்களை கீழேயிறக்கி மாற்று ரயிலில் அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக சுமார் 1 மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டது. அத்துடன் அதிகமாக பெண்கள் பயணித்த பெட்டிகளில் அரைகுறை ஆடைகளுடன் வடமாநிலத்தவர்கள் பயணித்ததாகவும், பெண்கள் இரண்டு, மூன்று முறை ரயிலை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

 

Categories

Tech |