Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஹாக் செய்யப்பட்ட பிரபல நடிகையின் இன்ஸ்டா”… அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்….!!!

நடிகை யாமி கௌதம் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் கூறியுள்ளார்.

பிரபலங்கள் பலரின் இணையதளபக்கங்கள் அவ்வப்போது ஹேக் செய்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் பிரபல நடிகையின் இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாக அந்த நடிகை கூறியுள்ளார். கௌரம் மற்றும் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் யாமி கவுதம். இவர் தனது இன்ஸ்டாகிராமில் 15 மில்லியனுக்கு அதிகமான பாலோவர்களை கொண்டுள்ளார். இவர் ரசிகர்களை கவரும் வண்ணம் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாவில் பகிர்த்து வருகின்றார்.

இந்நிலையில் இவரின் இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது நேற்றிலிருந்து என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பயன்படுத்த முடியவில்லை. யாரோ ஹேக் செய்யப்பட்டது போல தெரிகின்றது என ட்விட்டரில் கூறியுள்ளார். எனது இன்ஸ்டாவிலிருந்து ஏதாவது சர்ச்சைக்குரிய பதிவுகள் வந்தால் அதை யாரும் கண்டுகொள்ள வேண்டாம் எனவும் கவனமாக இருங்கள் எனும் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு பாலிவுட் வட்டாரமும் அதிர்ச்சி உள்ளது.

Categories

Tech |