மின்சாரம் தாக்கி இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி பகுதியிலுள்ள தாசம்பாளையம் குலத்து தோட்டத்தில் வசித்து வருபவர் கந்தசாமி. இவருக்கு 24 வயதில் விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். விக்னேஷ் ஹாங்காங்கில்லுள்ள தனியார் கப்பல் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்கு நாட்களுக்கு முன் விடுமுறையின் காரணமாக விக்னேஷ் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் விக்னேஷ் பயிர் வகைகளுக்கு பூச்சி கொல்லி மருந்து தெளிப்பதற்கு அவருடைய தோட்டத்திற்கு சென்றுள்ளார்.அப்போது மின் மோட்டாரின் இணைப்பில் வருகின்ற தண்ணீரைப் பிடிப்பதற்கு முயன்ற போது மின்கசிவு எற்படுள்ளது. இதை அறியாத விக்னேஷ் குழாயை தொட்டவுடன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளர். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் தோட்டத்திலேயே விழுந்து கிடந்துள்ளார்.
தோட்டத்திற்கு சென்று நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் குடும்ப உறுப்பினர்கள் தேட தொடங்கினர் . அப்போது விக்னேஷ் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர் .ஆனால் விக்னேஷ் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.