சீனாவின் வணிக மற்றும் நிதி தலைநகராக திகழும் ஷாங்காய்நகரில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக பொதுமுடக்கம் நடைமுறையில் இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வாகனத்தொழில் கடும் இழப்பை சந்தித்து உள்ளது. இது சர்வதேச நிறுவனங்களுக்கு பெரும் அடியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜீரோ கொரோனா கொள்கையை சீனஅரசு கடைபிடித்து வருவதால், பரவலைக் கட்டுப்படுத்த முழுஊரடங்கு ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஷாங்காய் மற்றும் சாங்சுனில் தொற்று பாதிப்பானது இப்போது தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், பொருளாதார மையமாக விளங்கக்கூடிய ஷாங்காய்நகரத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, நடைமுறையில் உள்ள ஊரடங்கை வரும் 26ஆம் தேதி வரை நீட்டித்து சீனஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும், தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையும் பட்சத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் எனவும் ஷாங்காய்நிர்வாகம் தெரிவித்துள்ளது.