நேற்று மட்டும் தமிழகத்தில் 5 மாவட்டங்கள் தவிர்த்து 32 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் நேற்று புதிதாக 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரித்தது. 5,043பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,32,618 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் 986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,08,124 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 11,734 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 79.96 % குணமடைந்துள்ளனர்.118 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு 4,808 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 65,872 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 30,41,529 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டு, 32 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டாலும் கூட சென்னையில் இரண்டாவது நாளாக 1000த்திற்கும் கீழ் தொற்று ஏற்பட்டதால் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். ஏறக்குறைய 66நாட்களுக்கு பிறகு சென்னை நிலவரம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக ஜூன் 3ஆம் தேதி 1012ஆக பாதிப்பு உயர தொடங்கிய நிலையில் நேற்று முன்தினம் தான் ( 7ஆம் தேதி – 984 ) தொற்று பதிவாகியது. தொடர்ந்து இரண்டாவது நாள் மகிழ்ச்சியை கொடுத்த இந்த நிலை தொடர்ந்து இன்று மூன்றாவது நாளும் மகிழ்ச்சி கொடுத்து கொரோனா இல்லா தலைநகராக மாற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆகும்.