அமெரிக்கா நாட்டில் உள்ள நியூயார்க் நகரில் ஹோனி தீவு அமைந்துள்ளது. இங்கு ஹாட் டக் பன் சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் ஆடவர் பிரிவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்ட நிலையில், ஜோய் செஸ்ட்நட் என்பவர் வெற்றி பெற்றார். இவர் 10 நிமிடத்தில் 63 பன்களை சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து பெண்கள் பிரிவில் மிக்கு சூடோ என்பவர் வெற்றி பெற்றார். இவர் 10 நிமிடத்தில் 43 பன்கள் சாப்பிட்டுள்ளார். இவர்களுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளனர்.
Categories